இளவாலையில் 10 மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice இளவாலையில் 10 மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு - Yarl Voice

இளவாலையில் 10 மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு



காய்ச்சலுடன் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு காரணமாக பண்டத்தரிப்பு பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 10 மாத ஆண் குழந்தை நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இளவாலை உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த திரு திருமதி தனீஸ்வரன் தம்பதிகளின் 10 மாத ஆண் குழந்தையான அக்ஷயன் என இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்றுமுன் தினம் குழந்தைக்கு காய்ச்சலுடன் கூடிய வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது குழந்தைக்கு வீட்டில் பரசிடமோல் மாத்திரைகளை வழங்கியுள்ளனர். எனினும் காய்ச்சல் குணம் அடையவில்லை.

நேற்றுகாலை பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தை மாற்றப்பட்டிருந்தது. 

எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. என்ன காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது என்பது தெரிய வரவில்லை.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைக்கு சடலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post