யாழ். மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் மாத்திரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 116 வழக்குகள் அதிகார சபையினால் பதியப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ். மாவட்ட இணைப்பதிகாரியும் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளருமாகிய அப்துல் லத்தீப் ஜஃபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் "இவ் வழக்குகள் காலாவதி, விலைப்பட்டியலின்மை, உத்தரவாதமின்மை, இறக்குமதி விபரமின்மை, SLS தரச்சான்றுதலின்மை, கட்டுப்பாட்டு விலையினைமீறியமை, பொறிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பான காரணங்களுக்காக பதியப்பட்டன" என்று தெரிவித்தார்.
இக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட எல்லைக்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 75 வழக்குகளுக்கு ரூபா 4 இலட்சத்து இரண்டாயிரம் ரூபாதண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக தமது உத்தியோகத்தர்களினால் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் பொருள் பதுக்கலில் ஈடுபடுவோர் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்
Post a Comment