யாழில் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice யாழில் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

யாழில் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு


யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியினால்  இதுவரை சுமார் 13 ஆயிரம் பேருக்கு பி .சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

கடந்த மார்ச் மாதம் தொடக்கம்  இன்று (05) வரையான காலப் பகுதியிலேயே 13 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் மருதங்கேணி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் இருந்து பி .சிஆர் செய்தவர்களில் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இந்தியாவில் நபர்களுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகப்படும் மருதங்கேணியில் உள்ள 60 பேரும் புங்குடுதீவு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து சுமார் 100 பேரில் பீ.சிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமூகத் தொற்று தொடர்பாக அவதானமாக இருக்குமாறும். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post