தனது முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்கிற வாக்குறுதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அளித்துள்ளார்.
19ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு தன்னால் எதனையும் செய்யமுடியாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கூடிய விரைவில் 20ஆவது திருத்த யோசனையை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
20ஆவது திருத்த யோசனை மற்றும் புதிய அரசியலமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பொன்றை அண்மையில் ஜனாதிபதி தனது செயலகத்தில் நடத்தினார்.
இந்த சந்திப்பில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாக செயற்பட்டுவருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதிஇ அராஜகத்தை எதிர்க்கின்ற மற்றும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான புதிய அரசியலமைப்பிற்கான தேவையை தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தத்தினால் தனது கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும்இ அதனால் 20ஆவது திருத்த யோசனையை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது இரண்டாவது பதவியாண்டு ஆரம்பிக்கும் திகதியான வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பினை சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Post a Comment