இளைஞர்களின் கோரிக்கைக்கு சுமந்திரன் எம்பி ஆதரவு - Yarl Voice இளைஞர்களின் கோரிக்கைக்கு சுமந்திரன் எம்பி ஆதரவு - Yarl Voice

இளைஞர்களின் கோரிக்கைக்கு சுமந்திரன் எம்பி ஆதரவு




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மின்விளக்கை அணைத்து இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.

புதிதாக கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக இன்று 20 ஆம் திகதி இரவு 20.00 அதாவது 8 மணுக்கு வீடுகளில் மின்விளக்கை அணைக்க வேண்டுமென ஒன்றிணைந்த ஐனநாயக இளைஞர் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த்து.

இந் நிலையில் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக மின்விளக்குகளை அணைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய இன்று இரவு தனது வீட்டில் மின் விளக்குகளை மூன்று நிமிடங்கள் அனைத்து தனது ஆதரவை வெளிப்படுத்திய புகைப்படங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post