இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை நடைபெற்றது.
கடந்த 1987 ஆம் ஆண்டு வைத்தியசாலை பணியாளர்கள் இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்தப் படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இதன் போது படுகொலை செய்யப்பட்டவர்களிற்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் வைத்திய சாலை பணிப்பாளர் உள்ளிட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் பணியாளர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment