வடமராட்சியில் 60 பேருக்கு பரிசோதனை - தனிமைப்படுத்தலில் 78 பேர் - முகாமிற்கு 9 பேர் அனுப்பி வைப்பு - Yarl Voice வடமராட்சியில் 60 பேருக்கு பரிசோதனை - தனிமைப்படுத்தலில் 78 பேர் - முகாமிற்கு 9 பேர் அனுப்பி வைப்பு - Yarl Voice

வடமராட்சியில் 60 பேருக்கு பரிசோதனை - தனிமைப்படுத்தலில் 78 பேர் - முகாமிற்கு 9 பேர் அனுப்பி வைப்பு




வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 60 பேருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே நேரத்தில் 09 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக, விடத்தற்ப்பளை தனிமைபடுதல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு  வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் 78 பேர் வாடிகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லையைத் தாண்டி இந்தியக் கடல் எல்லைக்குள் சென்று, இந்திய மீனவர்களது றோளர்ப் படகுகளில் ஏறி தங்கியிருந்துள்ளதுடன், இந்திய தமிழ்நாட்டுப் பகுதிக்குள் சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post