தமிழகத்தின் மீண்டும் அதிகரிக்கு கொரோனா தொற்று - இதுவரையில் 71 பேர் உயிரிழப்பு - Yarl Voice தமிழகத்தின் மீண்டும் அதிகரிக்கு கொரோனா தொற்று - இதுவரையில் 71 பேர் உயிரிழப்பு - Yarl Voice

தமிழகத்தின் மீண்டும் அதிகரிக்கு கொரோனா தொற்று - இதுவரையில் 71 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் இன்று புதிதாக 5017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் நிலவரம் தொடர்பான தரவுகளை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 5014 பேரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவதாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விட அதிகமாக 5548 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பதிப்பில் இருந்து இதுவரை 5 இலட்சத்து 75 ஆயிரத்து 212 பேர் குணமடைந்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post