முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அமைச்சின் கீழ் முன்னெடுக்கபட்ட பச்சிரம்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளாளி கிராமத்திற்கான 200 மீற்றர் பாதை ரூபாய் 2 மில்லியன் செலவில் இன்றைய தினம் வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் திறந்து வைத்ததுடன் கிளாளி தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களின் நலன் கருதி பாடசாலைக்கான குடிநீர் திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தேன்.
இந் நிகழ்வில், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் வடமாகாணத்திற்கான இணைப்பாளர் பாரதிராஜா மற்றும் பச்சிரம்பள்ளி பிரதேச செலகத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
Post a Comment