கொரோனா தாக்கம் காரணமாக மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது - Yarl Voice கொரோனா தாக்கம் காரணமாக மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது - Yarl Voice

கொரோனா தாக்கம் காரணமாக மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது


.

புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச்  சேர்ந்த பெண் மினுவாங்கொடையில் உள்ள பிரபல  ஆடைத்தொழிற்சாலை பணிபுரிந்த நிலையில்  சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு  குளிரூட்டப்பட்ட கட்டடத்தில்   400 பேர் வரை சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ​கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடன் ஒன்றாக பயணித்த, 40 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெண்ணின் கணவர், அவரின் பிள்ளைகள் நால்வர் மற்றும் பெண்ணின் தந்தை ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரது ஒரு குழந்தை மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post