யாழ் மாநகர சபை எல்லைக்குற்பட்டட, ஆறுகால்மடம், பழம் வீதியில், வீதிவாய்க்காலை மறித்து சட்டவிரோதமாக மதில் கட்டும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண மாநகரசபையினருக்கு தெரியப்படுத்தியும், இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அசட்டையீனமாக செயற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் வடிந்து செல்லும் வாய்க்காலில் தனி நபர் ஒருபர், ஒரு பகுதியை கையகப்படுத்தி மதில் கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதால், தமது பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி மாரி காலத்தில் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
போராச்சத்தில் ஈடுபட்டவர்கள், "நியாயமற்ற மாநகர சபையே எமது மக்களுக்கு நியாயம் தா? விலைபோகாதே "என பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment