கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாமன்றக்குழு இன்று (புதன்கிழமை) மீண்டும் கூடவுள்ளது.
இதற்கமைய நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம் மற்றும் புதிய கொரடா நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக தற்போது உள்ள சுமந்திரன் தேர்தல் காலத்தில் நடந்துகொண்ட விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதுடன்இ இம்முறை தமக்கு ஊடகப்பேச்சாளர் பதவி மற்றும் கொரடா பதவி நிலைகளை வழங்கவேண்டும் எனக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட்இ ரெலோ ஆகிய கட்சிகள் கூட்டாக வலியுத்தியிருந்தன.
அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பாக கட்சி கூடி ஆராய்ந்தபோதிலும் எவ்வித முடிவுகளும் எட்டப்பட்டிருக்கவில்லை.
மேலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறவிருந்த கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளாமையால் நடைபெறவில்லை.
இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாமன்றக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
Post a Comment