தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சற்று முன் ஆரம்பாகியது.
இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிகிக்கின்ற தமிழரசு மற்றும் ரெலோ மற்றும் புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்த கொண்டுள்ளனர்.
இதே போல தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் கூட்டணி, ஈழத்தமிழர் தமிழ்த் தேசியக் கட்சி, ஈபீஆர்எல்எப் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்த கொண்டுள்ளனர்.
இந் நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கூட்டத்திற்கு முதற் தடவையாக இன்று வருகை தந்தள்ள நிலையில் கூட்டத்தில் தான் கலந்து கொள்ள முடியாதென ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்துள்ளார்.
இதே வேளை தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கூட்டங்களில் கலந்து கொண்டு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment