இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதென இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ருத்துடன் நடத்திய காணொளி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் கூறியுள்ளதாவதுஇ 'லடாக் அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே சீனா தனது படைகளை ஆயுதங்களுடன் குவித்திருப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்பிரச்சினைஇ அரசியல் ரீதியான மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியிருக்கின்றது. சீனாவின் தரப்பில் இருந்து நியாயமான ஒரு விளக்கத்தையும் நாம் பெறவில்லை.
இதேவேளை தீவிரவாத நடவடிக்கைகளை கைவிடாத பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment