பொது மக்கள் பீதியடைய தேவையில்லை - யாழ் அரச அதிபர் - Yarl Voice பொது மக்கள் பீதியடைய தேவையில்லை - யாழ் அரச அதிபர் - Yarl Voice

பொது மக்கள் பீதியடைய தேவையில்லை - யாழ் அரச அதிபர்



தனிமைப்படுத்தலில்  இருந்தவருக்கே  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார்


 இலங்கை போக்குவரத்து சபையின்  
பருத்தித்துறை சாலை  பேருந்தின்  நடத்துனருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 புங்குடுதீவு பகுதியில் கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணித்த  பேருந்தின் சாரதி நடத்துனர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டநிலையில் PCR பரிசோதனையில்   தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

ஏற்கனவே அவர் தனதுவீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டதன்  காரணமாக சமூகத்தொற்று  ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என சுகாதாரப் பிரிவினர்  தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனினும் பொதுமக்கள் சுகாதாரத் திணைக்களத்தினரின் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து சமூக இடைவெளியினை பேணி  தமது அன்றாட செயற்பாடுகளை  மேற்கொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா  தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் யாழ் மாவட்டஅரசஅதிபர்  தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post