தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அதிமுக முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்ததற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகை தந்தார்.
தனது இல்லத்துக்கு வந்த பழனிசாமியை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஓ. பன்னீர்செல்வம். முதல்வர் பழனிசாமியிடம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் ஆசி பெற்றார்.
அதிமுகவில் இன்று அமைக்கப்பட்ட வழிகாட்டு குழுவின் 11 உறுப்பினர்களும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து பெற்றனர்.
Post a Comment