பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பதவி விலக கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் - Yarl Voice பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பதவி விலக கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் - Yarl Voice

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பதவி விலக கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்


பாகிஸ்தானில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பல்லாயிரக் கணக்கான மக்களை ஈர்த்தது.

மத்திய பாகிஸ்தான் நகரமான குஜ்ரான்வாலாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போராட்டத்தினை பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பி.டி.எம்) நடத்தியது. இது 11 எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இந்த போராட்டம் இம்ரான் கானை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற ஒன்றுபட்டது.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற இந்த பேரணியை நகர விடாமல் தடுக்க ஆளும்கட்சியினரும் பொலிஸாரும் வீதிகளில் தடுப்புகளை வைத்தபோதும் தடுப்புகளை நீக்கி விட்டு பேரணி நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் மக்களின் வாக்குரிமையை மீட்க வேண்டும் என்றும் மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் இருக்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து இந்த பிரம்மாண்டமான போராட்டத்தில்இ முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக். பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஜமைத் உலேமா இ இஸ்லாம் கட்சிகள் பங்கேற்றன.

அத்துடன்இ பி.எம்.எல்-என் தலைவர் நவாஸ் ஷெரீப்இ பிபிபி தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரிஇ மற்றும் ஜே.யு.ஐ-எஃப் தலைவர் ஃபஸ்ல்-உர்-ரெஹ்மான் உள்ளிட்ட ஒவ்வொரு முக்கிய எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.

மூன்று முறை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்இ லண்டனில் இருந்து காணொளி இணைப்பு மூலம் நேரடியாகப் பேசினார்.

மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தனது முதல் பொது உரையில்இ இராணுவம் தனது அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டதாகவும்இ 2018ஆம் ஆண்டு தேர்தலின் போது இம்ரான் கானை நிறுவியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post