யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்து.
கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனர் ஒருவர் கடலில் தவறி விழுந்திருந்ததாகவும், குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment