யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் கிருமித் தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கை - Yarl Voice யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் கிருமித் தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கை - Yarl Voice

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் கிருமித் தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கை


யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் பணியாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்
அவர் கடமைபுரிந்த நூதனசாலையில் இன்று கிருமித் தொற்றுநீக்கி விசிறப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை பொதுச்சுகாதார பிரிவினரால்இ தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தில் பணியாற்றும் பெண் ஒருவரின் தாய் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிலையில் அவர் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியிருந்தார்.

தொல்பொருள் திணைக்களத்தின் நூதனசாலையில் பணியாற்றும் பெண்ணுடன்இ யாழ்ப்பாணம் கோட்டையில் பணியாற்றும் அவரது நண்பரும்
கடந்த சில நாட்களுக்கு முன்னரே கம்பஹாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில்இ அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஊட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தொல்லியல் திணைக்களத்தின் ஏனைய பணியாளர்கள் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினரால் வேண்டப்பட்டுள்ளனர். இந்நிலையிலேய யாழ்.நூதனசாலையில் கிருமித் தொற்றுநீக்கி விசுறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post