அரியாலை கிழக்கில் கடல் நீரால் அழியும் அபாயம் - கிராம மக்கள் அச்சம் - Yarl Voice அரியாலை கிழக்கில் கடல் நீரால் அழியும் அபாயம் - கிராம மக்கள் அச்சம் - Yarl Voice

அரியாலை கிழக்கில் கடல் நீரால் அழியும் அபாயம் - கிராம மக்கள் அச்சம்






நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரியாலை கிழக்கு பிரதேசத்தில் சட்டத்திற்கு உட்பட்டும், சட்ட விரோதமாகவும் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. இரவு வேளைகளில் களவாக தனியார் காணிகளில் இவ்வாறு மணல் அகழ்வு இடம்பெறுவதோடு, பொய்யான காணி உறுதிகளையும், முறையற்ற காணிமாற்று முறைகளையும் பயன்படுத்தி கனியவள திணைக்களத்தில் அனுமதிபெற்று பெறப்பட்ட அனுமதிக்கு மேலாகவும் மணல் அள்ளப்படுகின்றது. 

இதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினராலும் முடியாதுள்ளது.
காவல்துறையினர்மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்களும், மணல் கொள்ளையர்மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்ற சம்பவங்களால்கூட எதுவும் நடைபெறவில்லை.

இந்த மணல் அகழ்வில் யாழ்ப்பாண மாநகரசபையின் உறுப்பினர்களும் ஈடுபட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இப்பிரதேசத்தின் மணல் அகழ்வு தொடர்பான பல வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு நீதிமன்றம், ஆளுநர் அலுவலகம், மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம், கனியவள திணைக்களம், கடற்றொழில் அமைச்சு என்பன விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் வினயத்துடன் கோரிக்கை விடுத்துள்ளதோடு இதனை வெளிப்படையாக வெளிப்படுத்த அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைவிட இப்பிரதேசத்தில் நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவரும் நிரந்தர குடியிருப்பாளராக இருக்கிறார் குறித்த விடயங்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களை வெளியிடவும் பீதி அடைந்த நிலையில் காணப்படுகின்றார்கள் அவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களின் வீடுகள் இரவு வேளைகளில் விஷமிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றமை   குறிப்பிடத்தக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post