வடக்குல் தொல்பொருள் திணைக்களம் வன ஜீவராசிகள் திணைக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது விபரங்களை சமர்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவன் கோரியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வனசீவராசிகள் திணைக்களம், காட்டுத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றின் கையகப்படுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் உரிமையாளர்களின் உறுதிப்பத்திர காணிகள் தொடர்பான தகவல்களை திரட்டுதல் தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
வனசீவராசிகள் திணைக்களம், காட்டுத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் காரணமாக வடக்கு மாகாணத்தில் வசிக்கும் பொதுமக்களின் தனிப்பட்ட உறுதிப்பத்திர காணிகளில் அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தில் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தால் அதனை ஆவணப்படுத்துவதனூடாக குறிப்பிட்ட திணைக்களங்களுடனும், பாராளுமன்றிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்திலும் கலந்துரையாடல்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு அவற்றை தீர்த்துக் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட திணைக்களங்களினால் பாதிப்புக்கு உட்பட்ட வடக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்கள் அது தொடர்பான தகவல்களை பா.உ கலாநிதி சுரேன் ராகவன் அவர்களது யாழ்ப்பாண அலுவலகத்திற்கு தபால் மூலம் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆந் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
அனுப்பி வைக்க வேண்டிய தபால் முகவரி : இல.104, பலாலி வீதி, ஊரெழு மேற்கு, உரும்பிராய், யாழ்ப்பாணம்
ஊடகப் பிரிவு
09-10-2020
Post a Comment