யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தனது உறுப்புரிமை மற்றும் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள கரவெட்டி பிரசேத சபையின் தவிசாளராக ஐங்கரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந் நிலையில் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்தும் தாம் விலகுவதாக திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இதேவேளை அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் அல்லது குழப்பங்கள. காரணமாகவே தனது பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
மேலும் தவிசாளர் பதவி மற்றும் உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக தமிழரசுக் கட்சி தலைவருக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment