சாவகச்சேரி - கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி கச்சாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று இரகசிய தகவல் கிடைத்துள்ளது.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 31 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பொலிசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் குறித்த இளைஞன் வவுனியா பேருந்து நிலையத்தில் சாதாரன ஊழியராக பணியாற்றுவதாகவும் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் பிரதான சந்தேக நபராக தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment