பரீட்சைகள் ஒத்திவைக்கப்படாது திட்டமிட்டபடி நடைபெறும் - கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு - Yarl Voice பரீட்சைகள் ஒத்திவைக்கப்படாது திட்டமிட்டபடி நடைபெறும் - கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு - Yarl Voice

பரீட்சைகள் ஒத்திவைக்கப்படாது திட்டமிட்டபடி நடைபெறும் - கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு



கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட பிரகாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள 2,936 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சைக்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post