தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. சக நடிகைகள் திருமணம் செய்து குடும்பத்தோடு ஐக்கியமான பிறகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது.
பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும்இ திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் திருமணம் செய்து கொள்வார் என்றும் மாப்பிள்ளை யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றன. சிம்புவை திரிஷா மணக்கப் போகிறார் என்றும் புதிய தகவல் பரவி உள்ளது.
ஆனால் திரிஷா சிம்பு ஆகியோர் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் இந்த கேள்வியை எழுப்பியபோதும் அவர் பதில் சொல்லவில்லை. இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment