யாழ்ப்பாணம் - வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நாளை சனிக்கிழமை (31) நடைபெறவிருந்த சுமங்கலி பூசை கொரோனா பாதுகாப்பு நடைமுறை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என ஆலய மகா சபை தெரிவித்துள்ளது.
குறித்த பூசைக்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்றிருந்த நிலையில் இன்று (30) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொவிட்-19 கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மதிப்பளிக்கும் முகமாக, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு குறித்த பூசை நடைபெறமாட்டாது என அதில் பங்குபற்றவிருந்த அடியார்களுக்கு மேற்படி மகா சபை அறிவித்துள்ளது.
Post a Comment