இணுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் இன்று மதியம் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இனுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் தனது கடமைகளுக்காக சென்றுள்ளார்.அவ்வாறான நிலையில் வீட்டில் ஒருவரும் இல்லாத சமயத்தில் பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து திருடர்கள் நுழைந்துள்ளனர்.
இவ்வாறு உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகைகளும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிசார் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment