பனை வளமாக்கல் திட்டம் வல்லையில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice பனை வளமாக்கல் திட்டம் வல்லையில் ஆரம்பித்து வைப்பு - Yarl Voice

பனை வளமாக்கல் திட்டம் வல்லையில் ஆரம்பித்து வைப்பு




வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வல்லையில் பனை வனமாக்கல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வல்லையில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு பனை வனமாக்கல் திட்டம் ஆரம்பமானது.

வல்லையில் மயானத்துக்கு அருகில் வெற்றிடமாகவுள்ள அரச காணியில் நூற்றுக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் தலைமையில் பனம் விதைகள் நடும் பணிகள் இடம்பெற்றன.

மகோன்னதமான இந்த சூழலியல் பணியில் வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். 


0/Post a Comment/Comments

Previous Post Next Post