சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் - Yarl Voice சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் - Yarl Voice

சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்


யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கொரோனா வழிப்புணர்வு பிரச்சாரம் இன்று முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரத்தில் கொரோனாவை தவிர்க்க முகக் கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

மேற்படி நிகழ்வில் கழுவி பயன்படுத்தக் கூடிய 500 முகக்கவசங்கள் பொலிஸாரின் உதவியுடன் முகக்கவசங்கள் அற்று நடமாடியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அண்மையில் வெளியான வர்த்தமானி தொடர்பாக துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சுதர்சனின் வழிகாட்டலில் போக்குவரத்து உதவி அத்தியட்சகர் மற்றும் போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்போடும் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.





0/Post a Comment/Comments

Previous Post Next Post