சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என அக் கட்சின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
எங்களுடை சமத்துவ கட்சி இன்று முதல் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
இச் செய்தியை கட்சியின் அனைத்து ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள் பொது மக்கள் ஆகியோருடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவரினதும் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது.
154 கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தன இதில் 121 கட்சிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தன. இதற்குள் ஆறு கட்சிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் எங்களுடைய சமத்துவ கட்சியும் ஒன்றாகும்
கட்சியின் சின்னம் கேடயம். இந்த கேடயச் சின்னத்தை எம்மை விட மேலும் இரண்டு கட்சிகள் கோரியிருந்தன. ஆனாலும் கேடயம் எமக்கே கிடைத்து.
Post a Comment