விளையாட்டு மைதான நுழைவாயிலும், சிறுவர் விளையாட்டு முற்றமும் திறந்து வைப்பு - Yarl Voice விளையாட்டு மைதான நுழைவாயிலும், சிறுவர் விளையாட்டு முற்றமும் திறந்து வைப்பு - Yarl Voice

விளையாட்டு மைதான நுழைவாயிலும், சிறுவர் விளையாட்டு முற்றமும் திறந்து வைப்பு




யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய விளையாட்டு மைதான நுழைவாயிலும், சிறுவர் விளையாட்டு முற்றமும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

ஞானபாஸ்கரோதய சங்கத்தின் தலைவர் தலைமையில்  இத் திறப்புவிழா நிகழ்வு இடம்பெற்றது. 

பாரளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தனால் ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் நிதியில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான நுழைவாயிலும் அமரர்கள் நடராஜா தங்கேஸ்வரி ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றமும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது. 

இந்திகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்,   அப்பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post