நல்லூர் முத்தமிழ் ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம் - Yarl Voice நல்லூர் முத்தமிழ் ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம் - Yarl Voice

நல்லூர் முத்தமிழ் ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற சிறுவர் தினம்



யாழ்.நல்லூர் முத்தமிழ் ஆரம்ப பாடசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள் பொறுப்பாசிரியர் சியாமளா சன்முகலிங்கம் அவர்கள் தலைமையில்  இன்றையதினம் பாடசாலையில் நடைபெற்றது.

அவ்வேளை பிரதேசசபைஉறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார்,சட்டத்தரணி சுதா கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறுவர்சிறுமிகளை மகிழ்வித்து வாழ்த்தினர்.

மேலும் இந்நிகழ்வில் பாடசாலையின் முகாமைத்துவகுழுத்தலைவர் செ.விபூஷன்,சமூகசெயற்பாட்டாளரும்,உறுப்பினரும் ஆகிய திரு.சி.அமிர்தலிங்கம்,மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

சிறுவர்சிறுமிகள் இணைந்து கேக்வெட்டி குதூகலத்துடன் இந்நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post