தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அரசியல் நாடகம் - ஏமாற்றும் முயற்சி என அங்கஐன் சாடல் - Yarl Voice தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அரசியல் நாடகம் - ஏமாற்றும் முயற்சி என அங்கஐன் சாடல் - Yarl Voice

தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு அரசியல் நாடகம் - ஏமாற்றும் முயற்சி என அங்கஐன் சாடல்


தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது அரசியல் நாடகம் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஐன் இராமநாதன் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பது இவர்களது நோக்கமல்ல என்றும் வீழ்ந்த வாக்குச் சரிவை உயர்த்துவதற்காக உணர்ச்சி அரசியலை முன்னெடுக்கின்றிhர்கள் என்றும் சாடியுள்ளார்.

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஒண்றிணைவு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவு என்பது இன்வொரு வெளிப்படையான அரசியல் நாடகம். அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இன்றைக்கு தேர்தலில் அவர்களுக்கு சரிவு ஒன்று ஏற்படுகின்றது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. 

கடந்த தேர்தலில் கூட்டமைப்பு முன்னணி கூட்டணி எல்லாம் எதிர்பார்த்தது என்ன. வந்தது என்ன என்று பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் அவர்களுக்கு பின்னடைவும் ஏமாற்றமமும் தான். இவர்களை விட அதிகூடிய மக்கள் முன்னற்றமான வாழ்க்கைக்கு தான் வாக்களித்துள்ளனர். 

அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் அதே கோகரிக்கைகள் சிந்தனைகள் இருக்கும். தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனைகளும் இருக்கும். அதற்காக எனக்கு வாக்களித்தவர்களுக்கு தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனை இல்லை என கூற முடியாது. ஆனால் இது அவசர தேவையாக இருக்கிறது. ஆனால் இவர்கள் இந்த அவசர தேவையை புர்த்தி செய்வதற்கு எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. 

அவர்களது இப்ப ஒரேயொரு நோக்கம் சரிவடைகிற வாக்கை தூக்கி நிறுத்தவதற்காக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் இலாபத்தை அடைவதற்கான ஒரு நாடாகம். 

அந்த நாடகத்திற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்துச் செய்கின்ற போது மீண்டும் மக்களிடத்தே நம்பிக்கையை ஏற்படுத்தி அனைத்து வாக்குகளையும் சூறையாடி மக்களுக்கு மிண்டும் ஏதும் செய்யாமல் இன்னமும் ஐந்து வருடம் காலத்தை விணாக்குவதற்கான முயற்சி. அந்த முயற்சி எதிர்காலத்தில் வெற்றிபொறாதென்று நம்புகிறேன். 

மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வைப் பெற வேண்டுமென்றால் அல்லது தமிழ் தரப்புக்கள்; சொல்லகின்ற விடயங்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் ஒரு பேச்சுவார்த்தையுpன் ஊடாகத் தான் அந்த தீர்வை பெற முடியும். 

ஆனால் அந்தப் பேச்சு வார்த்தை செய்வதற்கான முன்னேற்பாடுகளை அவர்கள் செய்யவில்லை. கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேசி பேசி தான் மக்களுடைய தேவைகளை புர்த்தி செய்கின்றோம் என்று சொல்லி அவர்களுக்கு முண்டு கொடுத்த அளவிற்கு இந்த அரசுடன் பேவதற்கான முயற்சியை கூட எடுக்கவில்லை. அல்லது அவர்களுடன் கதைப்பதற்கு கூட சந்தரப்பத்தை ஏற்படுத்தவில்லை. 

ஆகவே; மக்களுக்கான நியாத்தை பெற்றுக் கொடுப்பதோ அல்லது தீர்வை பெற்றுக் கொடுப்பதோ அவர்களுடைய நோக்கம் அல்ல. ஏனென்றால் தங்களுடைய அரசியலை அடுத்த கட்டம் கொண்டு செல்வதற்காகவே செயற்படுகின்றனர். 

அந்த அடிப்படையில் வாக்குகளை மையப்படுத்தி இந்த அரசியல் நடக்கிறதே ஒழிய மக்களின் முன்னேற்றத்தை நோக்காக கொண்டு நடக்கவில்லை. இந்தப் பிரச்சனைகளுக்கு திர்விற்கு எதிர்ப்பு காட்டுவதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட தரப்புடன் முரண்பாடுகளை தவிர்த்து அதற்கான தீர்வுகைள கானுவதாக இருக்க வேண்டுமானால் பேச வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post