சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதில் யாழ்ப்பாண மக்கள் அசண்டையீனம் - ஆபத்து தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை - Yarl Voice சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதில் யாழ்ப்பாண மக்கள் அசண்டையீனம் - ஆபத்து தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை - Yarl Voice

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதில் யாழ்ப்பாண மக்கள் அசண்டையீனம் - ஆபத்து தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை




யாழில் சுகாதார நடைமுறையினை  பின்பற்றாத நிலைமை காணப்படுவதாக   யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றையதினம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் 

யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மக்கள்  பின்பற்றுவதாக தெரியவில்லை அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை  சுகாதார நடைமுறைகள் என்பது மக்களை பாதுகாப்பதற்காகவே ஆனால் மக்களின் அதனை ஏன் பின்பற்ற தவறுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை குறிப்பாக வீதிகளில் முகக்கவசம் அணியாது பயணிக்கிறார்கள் இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்

நான் யாழ்ப்பாண பொது மக்களிடம் தயவாக ஒரு கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன் நீங்கள் அனைவரும் கட்டாயமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுங்கள் அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தை பொருத்தவரைக்கும் தற்போது  சிலர்  தொற்றுக்குள்ளாகி யிருக்கிறார்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில்  பொதுமக்கள்
மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்

 குறிப்பாக பேருந்துகளில் ஆசன பிரமாணத்திற்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது அது கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் அதிலும் பேருந்தில் பயணம் செய்வோர்  கட்டாயமாக நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் பேருந்தின் இலக்கம் தொடர்பான விவரங்களை நீங்கள் கட்டாயமாக சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் எனெனில் எங்காவது ஒருவருக்கு தொற்றுஏற்படுமாக இருந்தால் நீங்களும் சில வேளைகளில் பேருந்தில் பயணம் செய்ததன் காரணமாக சில வேளைகளில் சுகாதார நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் எனவே பொதுமக்கள் குறித்த விடயங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்


  மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதார நடைமுறைகள்  சுகாதாரப் பிரிவினர் அறிவிக்கப்பட்டுள்ளது எனவே அந்த சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் வழமையான செயற்பாடுகளின் போது பஒரு மீட்டர் சமூக இடைவெளியை கட்டாயமாக பேணி இந்த  யாழில் மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நான் தயவாக கேட்டுக் கொள்கின்றேன் எனவும்  யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post