நெடுந்தூர (நகரங்களுக்கிடையிலான) பேரூந்து நிலையத்தின் வேலைத்திட்டங்கள் முடிவுறும் நிலையை எட்டியுள்ளது. அடுத்த மாதமளவில் பேரூந்து நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பேரூந்து நிலையத்தை திறப்பதற்கான இறுதி ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் தலைமையில் (6) இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது இறுதி செய்யப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர்கள், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் பிராந்திய அலுவலக அதிகாரிகள், பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகள், ரெலிகொம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment