கைக்குண்டுடன் யாழில் ஒருவர் கைது - Yarl Voice கைக்குண்டுடன் யாழில் ஒருவர் கைது - Yarl Voice

கைக்குண்டுடன் யாழில் ஒருவர் கைது




யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு முயன்ற ஒருவரை  பொதுமக்கள் மடக்கிப் பிடித்து யாழ்ப்பாண போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் குறித்த நபரை பொலீசார் சோதனையிட்டபோது  அவரிடமிருந்து வெடிக்கக்கூடிய நிலையிலிருந்த கைக்குண்டுஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது 

பொன்னகர் முறிகண்டி யைவசிப்பிடமாக கொண்ட 22 வயதுடைய இளைஞனே கைக்குண்டுடன் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைதுசெய்யப்பட்டவர்  மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்காக வே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததாகவும்  திருட்டில் ஈடுபடும் போது  கைக்குண்டினை   காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் ஏற்கனவே யாழ் மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார் திருடிய மோட்டார் சைக்கிள்களில் ஒரு மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணபொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின்பின்னர் நீதவானிடம்  முற்படுத்தப்படவுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post