யாழ்ப்பாணம் கிராமசேவகர் பிரிவுகளான ஜே 65 , 67 ஐ உடன் லொக்டவுனிற்கு உட்படுத்துமாறு சுகாதார திணைக்களம் கொரோனா தடுப்பு செயலணியிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஐவர் இனம் கானப்பட்டனர். அவ்வாறு இனம் கானப்பட்ட ஐவரில் மூவர் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தபோதும் இருவர் போலியகொட மீன் சந்தைக்குச் சென்று கடந்த வெள்ளிக்கிழமையே யாழ்ப்பாணம் திரும்பியிருந்தனர்.
அவ்வாறு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் வெள்ளிக் கிழமை இரவு தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டு சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரிற்கும் அன்றைய தினம் உறுதியான பெறுபேறு கிடைக்காது மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் குறித்த இரு குருநகரைச் சேர்ந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சமயம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குருநகரின் இரு கிராம சேவகர் பிரிவுகளையும் உடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கையிலேயே அதிக மக்கள் வாழும் கிராமமாக யாழ்ப்பாணம் குருநகர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment