உலக பார்வை தினம் 2020ஜ ( world sight day 2020) முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் கண்ணியல் பிரிவினர் இந்த வாரம் தங்களுடைய சாதாரண வேலைகளுக்கு மேலதிகமாக 273 வெண்புரை (Cataract Surgery ) சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டார்கள்.
நோயாளிகள் அனைவரும் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். யாழ் மாவட்டத்தில் அனேகர் கண் வெண்புரை சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Covid 19 காலப்பகுதியிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இச் சத்திரசிகிச்சைகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். கண்ணியல் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.M. மலரவன் மற்றும் விழித்திரை சத்திரசிகிச்சை நிபுணர் Dr. J.W. விஜயராணி அவர்கள் இச் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டார்கள்.
சிகிச்சைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சுகாதார அமைச்சு வழங்கியது.
வைத்தியசாலை நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் குறைந்த ஆளணி வளத்துடன் கண்ணியல் பிரிவு இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இச் சத்திர சிகிச்சைகளை ஒழுங்கமைத்த கண்ணியல் வைத்திய நிபுணர் Dr.M. மலரவனுக்கு எமது பாராட்டுக்கள்.
Dr.T.சத்தியமூர்த்தி
பணிப்பாளர்
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்.
Post a Comment