யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டப திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் இடையில் நேற்று மாலை ஓர் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கையினை கூட்டமைப்பின் தலைவர் விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதிப் பங்களிப்பில் இந்திய ரூபா 100 கோடியில் 12 அடுக்கு மாடி கலாச்சார மண்டபம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் திறப்பதற்கு தயாராகவே உள்ளதனால் இது தொடர்பில் நாம் நே்டியாகவே பல கோரிக்கையினை விடுத்தமையினால் தற்போது திறப்பு விழாவிலும் அதனை அமைத்து தந்த இந்தியப் பி்தமர் மோடி நேரில் வருகை தர வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவரின் விருப்பத்தினை உரிய தரப்பிற்கு அனுப்புவதாக உயர் ஸ்தானிகர் பதிலளித்துள்ளார்.
Post a Comment