நாளை முதல் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை - Yarl Voice நாளை முதல் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை - Yarl Voice

நாளை முதல் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை



இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் நாளை ஒக்டோபர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக இரண்டாம் தவணை விடுமுறை வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் என அறிவிக்கப்பட்டது.

எனினும் கம்பஹா – மினுவாங்கொடயில் 39 வயதுடைய பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை காலை  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனால் நாடுமுழுவதும் பாடசாலைகளை மூட அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post