ஊர்காவற்துறை தம்பாட்டியில் கடல் நீர் உட்புகுந்த்தால் அப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அப்பகுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைநைப் பார்வையிட்டதுடன் தடுப்பணை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் தீவகத்தின் ஊர்காவற்றுறை கரையோரப் பகுதி கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளதால் அப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்பாட்டி கிராமத்தில் இன்று அதிகாலை கடல் நீர் உட்புகுந்துள்ளது.
கடற்கரைநை அண்மித்த இடங்களிலுள்ள மக்கள் காலையில் எழுந்து பார்த்த போது தமது வீடு சூழலில் கடல் நீர் ஓடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறிப்பாக கடற்கரைகளில் இருந்து சுமார் 50-100 மீற்றர் வரையில் கடல் நீர் உட்புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகையினால் வெள்ளம் வரு முன் அணைகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தடுப்பு அணைக்கட்டை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் அப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
இந் நிலையில் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான அங்கஜன் இராமநாதன் அப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டு அப்பகுதள் மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது அந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும் ஆராய்ந்த்துடன் இதற்குரிய நடவடிக்கைகளை தற்காலிகமாவேனும் முன்னெடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நிதி ஒதுக்கி தடுப்பணைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊர்காவற்துறை பிரதேச செயலர் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
Post a Comment