கொடிகாமம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வரணி கறுக்காய் திடீர் சுற்றி வளைப்பு மேற்கோள்ளப்பட்டது.
இதன் போது ஆறு போத்தல் கசிப்பு, 200 போத்தல் கோடா என்பனவுடன் கசிப்பு உற்ப்பத்தி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வரணி கறுக்காயப் பகுதியில் சிறு பற்றைக்காடுப் பகுதியில் இயங்கி வந்த கணிப்பு உற்பத்தி தொடர்பாக கொடிகாம்ம் பொலிஸ் நிலைய, விசேட புலனாய்வுப்பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே சட்ட விரோத மது போத்தல்கள் உபகரணங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment