இணுவில் பாலாவோடையில் அமைக்கப்பட்டுள்ள ஈஸ்வரி இராஜயோக சிகிச்சை மற்றும் யோகாசன பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிலையத்தலைவர் கருணாசாகர நரசிம்மதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரோடு வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்ஷன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்நிலையத்தில் யோகாசனப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
Post a Comment