முதல்வர் ஆர்னோல்ட்டை திடிரென சந்தித்த சுமந்திரன் எம்.பி - வெளியாகிய - Yarl Voice முதல்வர் ஆர்னோல்ட்டை திடிரென சந்தித்த சுமந்திரன் எம்.பி - வெளியாகிய - Yarl Voice

முதல்வர் ஆர்னோல்ட்டை திடிரென சந்தித்த சுமந்திரன் எம்.பி - வெளியாகிய



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்புனர்களை கடந்த சில தினங்களாக சுமந்திரன் சந்தித்து வருகின்றார்.

இந்த நிலையிலையே இன்றையதினம் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள மாநகர சபையின் முதல்வரையும் உறுப்புனர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சுமந்திரனின் ஆதரவாளராக அடையாளப்படுத்தப்பட்டு வந்த ஆர்னோல்ட்டுக்கும் சுமந்திரனுக்கும் இடையே கடந்த தேர்தலில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தோடு இருவருக்கும் இடையிலான சந்திப்புகளும் எவையும் இடம்பெறாமல் இருந்த நிலையில் இன்று இருவரும் மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் கூட்டமைப்பின் கீழுள்ள மாநகர சபையன் பாதீடு நிறைவேற்றம் சம்பந்தமாகவே இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக சுமந்திரன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post