யாழ்.மாவட்டத்தில், வடமராட்சி கிழக்கு மற்றும் புங்குடுதீவு உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள சுமார் நூற்றிக்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தொிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணியதற்காக வடமராட்சி கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும்
யாழ்.புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையிலும், யாழ்.பல்கலைகழக மருத்துவபீடத்திலும் இதுவரை சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சிகிச்சையளிக்கும் சிறப்பு விடுதி தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கின்றது. இன்றும் ஒருவர் சந்தேகத்தினடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளார். என பணிப்பாளர் மேலும் தொிவித்திருக்கின்றார்.
Post a Comment