கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக தினேஷ் கார்த்திக் இருந்தார். அந்த அணியில் இங்கிலாந்து அணியின் மோர்கன் விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்த அவருக்கு அனுபவம் அதிகமாக இருப்பதால் அவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக மோர்கன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment