தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலிருந்து வடக்கிற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் - சுகாதார பிரிவினர் அறிவிப்பு - Yarl Voice தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலிருந்து வடக்கிற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் - சுகாதார பிரிவினர் அறிவிப்பு - Yarl Voice

தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலிருந்து வடக்கிற்கு வருபவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் - சுகாதார பிரிவினர் அறிவிப்பு



தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து  வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள்  சுய தனிமைப்படுத்தப்படுவார்கள். 


நாட்டின்  கம்பஹா மாவட்டம்,  கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறும்  
வருகை தருவோர் தொடர்பான தகவல்களை 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post