ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வடக்கு ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடக்கு ஊடக அமைப்புக்கள் இணைந்து முல்லலத்தீவில் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் வரை பேரணியாக சென்று குறித்த அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட அரச அதிபரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.
இந்த போராட்டத்தின் போது ஐனாதிபதி க்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment