கொரோனாவை கட்டுப்படுத்துகின்றதுடன் டெங்கு கட்டப்பாட்டு நடவடிக்கையையும் தீவிரப்படுத்துங்கள் - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து - Yarl Voice கொரோனாவை கட்டுப்படுத்துகின்றதுடன் டெங்கு கட்டப்பாட்டு நடவடிக்கையையும் தீவிரப்படுத்துங்கள் - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து - Yarl Voice

கொரோனாவை கட்டுப்படுத்துகின்றதுடன் டெங்கு கட்டப்பாட்டு நடவடிக்கையையும் தீவிரப்படுத்துங்கள் - மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்து


யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சாவகச்சேரி பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை  தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

 யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோணா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தற்போது கொரோணா சமூகத்தொற்று தொடர்பில் யாழ் மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

 எனினும் தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு தொடர்பிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றும் அதிகரிக்குமாயின் யாழ் மாவட்டத்தில் அபாயநிலை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

 யாழ் மாவட்டத்தின்   சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு தொற்றால் பாதிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றது கோரணா தொற்று தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது டெங்கு ஒழிப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

 எனவே சாவகச்சேரி பொது வைத்திய அதிகாரி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலர்  குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்து மாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post