பனை சார் உற்பத்திப் பொருட்களுக்கு எதிர்காலத்தில் வரிவிலக்கு அளிப்பது தொடர்பில் தான் அது தரப்பில் பேசிக் கொள்வதாக உள்நாட்டு சிறுகைத்தொழில் பனை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
வரணி பகுதியில் அமைந்துள்ள பனை தொழிற்சாலை உற்பத்தி நிலையத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், எதிர்காலத்தில் பணம் பொருள் சார் உற்பத்திப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பில்தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார்.
அத்துடன் மானிய அடிப்படையில் கடன்களை பெற்று அவர்களின் வாழ்வாதாரத்தினை மேலும் மேம்படுத்தும் முகமாக பல்வேறு திட்டங்களை தான் முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இதன் போது ராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
குறிப்பாக பணம் பொருள் சார் உற்பத்திப் பொருட்கள் மூலம் இந்த தேசிய உற்பத்தியில் இவர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்து இருக்கின்றது என்பதில் நான் பெருமை அடைகிறேன்.
ஜனாதிபதி அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைய பனை அபிவிருத்தியினை மென்மேலும் அபிவிருத்தி செய்து அதன்மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்காக எமது நாட்டின் அபிவிருத்தி அடையச் செய்து கொள்ள முடியும்.
கடந்த அரசாங்க ஆட்சியின்போது பனம்பொருளுக்கு அதிகளவான வரி அதிகரிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால் உற்பத்தி செலவினை கூடி பெற்றுக்கொள்ள முடியாத நிலை இந்த உற்பத்தியாளர்களுக்கு காணப்பட்டது
Post a Comment